August 27, 2010
Voice of a grieved heart
வயதின் சுருக்கங்களுக்குப் பின்னே
வாழ்வின் பெருக்கங்கள்
வாழ்ந்ததற்கு அடையாளமாக...
தெருவில் எறியப்படுகின்ற
தேய்ந்த எந்திரங்கள்
படித்து முடித்துவிட்ட
பாட புத்தகங்கள்...
கவனித்து கொள்ள மட்டுமே நாங்கள்
கவனிக்கப்பட அல்ல .
வீசப்படும் வார்த்தைகளுக்கு வலிக்காமல்
தழுவி எடுத்துக்கொள்ள
பழகிவிட்டோம்.
விடைகள் கிடைக்காத உள்ளத்தை
உடையாமல் கொண்டு செல்ல
நடையின் வேகம் குறைத்தோம்.
சுமந்து எம்மை மறுநாளில்
கொண்டு சேர்க்க முடியாமல்
தள்ளாடும் நாட்கள்!
நிஜ விழுதுகளில்
ஊஞ்சலாடியதொரு
காலம்... இன்று
நினைவுகளையே விழுதாய் ஊன்றி
நிற்கிறோம் நாங்கள் !
முதிர்ந்ததும் உதிர்ந்துவிடும்
மந்திரம் தெரியவில்லை...
முடியாதவற்றிலிருந்து ஒதுங்கும்
இங்கிதமும் அறியவில்லை..
மனவலியின் அழுத்தத்தில்
உடல் வலி மறக்கிறோம்...
உடல் வலியின் உக்கிரத்தில்
மனமிருப்பதையே மறக்கிறோம்...
I read this recently in a tamil magazine.. written by K.P.Jana.. More than the selection of words, he just expressed the real feelings of most of the old aged people..That too, the last two para's was too heavy with pain and emotions... thought to share with you people...
Why cant we ensure them a happy aging!!! The old aged people's attitude towards aging is also an important factor... But someday or other everyone will be aged.. Why cant we appreciate their presence and use their experience in life...Just a food for thought...!!! Let us try to be the change which we expect in the society...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment